
கோல்கட்டா பெண் டாக்டர் படுகொலை : இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்
இந்நிலையில், கோல்கட்டாவில் இசைக்கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் : இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கோல்கட்டாவில் நடக்கவிருந்த கச்சேரியை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நம் நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகிலுள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன். எனது இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!