
நடிகர் சித்திக் தொந்தரவு கொடுத்தாரா? - ஆஷா சரத் பதில்
அதேசமயம் இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படாத நடிகைகள் சிலரையும் இது போன்ற விஷயங்களில் இணைத்து செய்திகள் வெளியாவதும் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் சித்திக்குடன் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் சித்திக்கின் மனைவி கதாபாத்திரத்தில் இணைந்து நடித்த நடிகை ஆஷா சரத் கூட சித்திக்கின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானார் என்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் அளித்துள்ள ஆஷா சரத், “சித்திக்குடன் இணைந்து நடித்தபோது எனக்கு அவரிடம் இருந்து எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. மரியாதை மிக்க ஒரு சக நடிகராக. ஒரு நல்ல நண்பராகவே என்னிடம் பழகினார். என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்தார் என்பது போன்று செய்திகளை எதற்காக வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி ஹேமா கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்துள்ள விஷயங்களை அரசு விரைந்து செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!