
ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சூரி : இன்று வெற்றிகரமான ஹீரோ
சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து "வெண்ணிலா கபடிக் குழு" படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக குறிப்பிடும்படியான படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணியாக சில படங்களில் வலம் வந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த "விடுதலை" படத்தின் பாகம் 1 மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து இந்த வருடம் வெளிவந்த "கருடன்" படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. கடந்த வாரம் வெளிவந்த "கொட்டுக்காளி" படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்து "விடுதலை 2" படத்தில் நடித்து வருகிறார் சூரி. இவை தவிர அவர் கதாநாயகனாக நடிக்கும் சில படங்களின் அறிவிப்பும் வந்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "துள்ளி விளையாடு" என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “சூரி கதாநாயகனாக நடிப்பாரா ?,” என பத்திரிகையாளர் ஒருவரது கேள்விக்கு, “வண்டி நல்லா போயிட்டிருக்குது…அதைத் தரிசுல இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்துடாதீங்க… ரோட்டுலயே போகட்டும்,” என பதிலளித்தார்.
அப்படி இருந்தவர் இப்போது வெற்றிகரமான ஹீரோ என்பது சரியான வளர்ச்சிதான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிக்கு எமது வாழ்த்துகள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!