
சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு
ஆக 26, 2024
Advertisement
விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார் வெங்கட்பிரபு. அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதையடுத்து சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். அதனால் இந்த படங்களில் அவர் நடித்து முடித்த பிறகுதான் தான் இயக்கும் படம் தொடங்க உள்ளது என்கிறார் வெங்கட் பிரபு.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!