
பிளாஷ்பேக்: பஞ்சாபி நடன பயிற்சி பெற்ற எம்ஜிஆர்
இதையும் மீறி அவ்வப்போது சில படங்களின் பாடல்களில் நடனத்தில் அசத்தியிருப்பார் எம்ஜிஆர். அந்த படங்களில் ஒன்று "குடியிருந்த கோவில்". எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1968ம் ஆண்டு வெளியான படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக எம்ஜிஆர் பஞ்சாபி நடனம் ஆடிய “ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...” என்ற பாடல் இன்றவுளம் பாடப்பட்டும் மேடைகளில் ஆடப்பட்டும் வருகிறது. ஆலங்குடி சோமு எழுதிய இந்த பாடலுக்கு பஞ்சாபி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குனர் சங்கர், அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் முடியவே முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டார். பஞ்சாபி நடன கலைஞர்களிடம் ஒரு வாரம் வரை முறையான பயிற்சி பெற்று இந்த பாடலுக்கு ஆடினார். அது பெரும் வரவேற்பை பெற்றது. குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!