
மிரட்டும் சூர்யாவின் கங்குவா டிரைலர் வெளியானது
இந்த நிலையில் இன்று(ஆக., 12) இப்படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு டிரைலர் வெளியாகி இருக்கிறது. 2:37 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் பெருமாச்சி மண்ணை காக்க போராடுபவராக வித்தியாசமான வேடத்தில் சூர்யா உள்ளார். சூர்யா, பாபி தியோல் இடையேயான சண்டை தான் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அவர்களின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. பிரம்மாண்டமான ஆக் ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. டிரைலர் வெளியான இரண்டு மணிநேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றன. தற்போது கங்குவா டிரைலர் வலைதளங்களில் டிரெண்ட்டாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!