விடாமுயற்சி : கவனம் பெறும் ரெஜினாவின் முதல் பார்வை
Advertisement
Advertisement
விடாமுயற்சி : கவனம் பெறும் ரெஜினாவின் முதல் பார்வை
ஆக 12, 2024
அ நிறம் | அளவு
Advertisement
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. அஜர்பைஜான் நாட்டில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீதமுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பில் காலை ஏழு மணிக்கே ஆஜராகிவிடும் அஜித், இரவு 2 மணி வரை நடித்து கொடுக்கிறாராம். இப்படத்தில் நடித்துள்ள அஜித், அர்ஜூன், ஆரவ், த்ரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது விடாமுயற்சியில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரெஜினாவின் முதல் பார்வை போஸ்டரையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாலை ஒன்றில் ஸ்டைலான தோற்றத்தில் அவர் நடந்து வருவது போன்றும், பின்னணியில் அஜித், த்ரிஷாவின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!