
இந்தியா தவிர வெளிநாடுகளில், ஓடிடியில் மீண்டும் வரும் அன்னபூரணி
வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தியேட்டர் வெளியீட்டில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் கடந்த வருடக் கடைசியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமர் அசைவ உணவு சாப்பிட்டார்,” என்று படத்தில் இடம் பெற்ற வசனம்தான் அந்த சர்ச்சைக்குக் காரணம். தொடர்ந்து ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக படக்குழுவினர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டது. அடுத்து நடிகை நயன்தாராவும் அது குறித்து மன்னிப்பு கேட்டார். அதனால், அப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
இதனிடையே, "அன்னபூரணி" படம் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தங்களது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாக உள்ளதாக "சிம்ப்ளி சவுத்" என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!