
நலமாக இருக்கிறேன் : பிரேமலு நடிகர் வெளியிட்ட தகவல்
இதில் எதிர்பாராத விதமாக இந்த நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் சங்கீத் பிரதாப் தற்போது தான் நலமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பதிவு மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் முந்தைய நாள் இரவு விபத்தை சந்தித்தாலும் நல்ல வேலையாக அனைவருமே தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் 24 மணி நேரம் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் இது குறித்து தகவலை வெளியே யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனக்கு சிறிய காயம் தான்.. ஆனால் தற்போது நலமாக இருக்கிறேன். இன்று வீடு திரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன். மேலும் கார் ஓட்டுநர் மீது நான் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!