
மீண்டும் மீடூ சர்ச்சையில் ஜான் விஜய் : சின்மயி வெளியிட்ட பதிவு
ஒரு பெண் பத்திரிகையாளர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு தான் சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த நடிகர் ஜான் விஜய் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் தேவையற்ற வார்த்தைகளை பேசி அணுக முயற்சித்ததாகவும், ஆனால் அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் பவுன்சர்கள் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பானவர்கள் என்பதால் தான் அவரிடம் இருந்து தப்பித்ததாகவும் கூறி எப்போதுமே இந்த மீ டூ பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் பின்னணி பாடகி சின்மயிக்கு இது குறித்து தெரிவித்திருந்தார்.
அதில் ஜான் விஜய் தான் ஒரு நடிகர் என்கிற கோதாவில் இதுபோன்று ஹோட்டலுக்கு, பார்ட்டிகளுக்கு வரும் பெண்கள் சிலரை வலுக்கட்டாயமாக குடிக்க அழைப்பதும் மற்றும் தன்னுடன் நடனமாட அழைப்பதும் என அவர்களை தனது அழைப்புக்கு நோ சொல்ல முடியாமல், எஸ் சொல்ல வைக்கும் விதமாக நடந்து கொள்வதும் என அவரது செயல்கள் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்டுகளை சின்மயி தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜான் விஜய் மீதான இந்த புதிய மீ டூ குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!