
நடிப்பை திறமையை நிரூபிக்க வைத்தவன் ‛மழை பிடிக்காத மனிதன் : மேகா ஆகாஷ் சொல்கிறார்
படத்தில் நடித்திருப்பது குறித்து மேகா ஆகாஷ் கூறியதாவது: விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். "மழை பிடிக்காத மனிதன்" படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. என் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
என் கேரியரில் சிறந்த கதாபாத்திரத்தை "மழை பிடிக்காத மனிதன்" படத்தில் விஜய் மில்டன் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது நன்றி. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!