
பாரிஸ் ஒலிம்பிக்கில் குடும்பத்தினருடன் நடிகர் சிரஞ்சீவி
அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரண் மனைவியுமான உபாசானா சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!