
என் தவறுக்கு வருந்துகிறேன் : சுதா கொங்கரா
ஆனால் அவர் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். அது சாவர்க்கர் அல்ல, ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே என பலரும் சுட்டிக்காட்டி சுதாவை விமர்சித்தனர். அதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் தவறான கருத்து கூறியதாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் சுதா.
அந்த பதிவில், ‛‛என் தவறுக்கு வருந்துகிறேன். எனது 17வது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்"" என பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!