
குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம்
ஹலிதா ஷமீம் கூறியதாவது : “குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
குழந்தை பருவத்திலிருந்து பதின்ம வயதுக்கு மாறும்போது அவர்களிடம் ஏற்படும் மனம் மற்றும் உடல்ரீதியான மாற்றங்களை பேசுகிற படம். ஒவ்வொரு மனிதனுக்கும் நட்பு என்பது ஆழமாக உருவாவது குழந்தை பருவத்தில்தான். அந்த நட்பு பதின்ம வயது வரை தொடர்ந்தால் அதன் ஆழமும், அர்த்தமும் வலுவானதாக இருக்கும் என்பதை சொல்லும் படம். சென்னையில் தொடங்கும் படம் காஷ்மீரில் முடியும். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக வந்த மனோஜ் பரமஹம்சா எனது உழைப்பு, நோக்கம் இவற்றை புரிந்து கொண்டு அவரே தயாரிப்பாளர் ஆனார். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!