
விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம்
இதுதொடர்பாக அந்த தொகையை அவர் திருப்பி தர சொல்லி தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பலமுறை தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் விஷால் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன்பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!