
இயக்குனருக்காக தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்த ஐஸ்வர்யா தத்தா
மேலும் அவர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது, அந்த படத்தில் நான் நடித்தேன். படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் எனது நண்பர், மனிதாபிமானமிக்கவர். அவரிடம் என்னுடைய எல்லா விஷயத்தையும் சொல்வேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் வாலி பற்றியும், அவரிடமிருந்த "மெட்ராஸ்காரன்" கதை பற்றியும் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச தயாரிப்பாளர். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!