
விபத்தில் இறந்த ஸ்டன்ட் கலைஞருக்கு கார்த்தி நேரில் அஞ்சலி
இந்த துயர சம்பவம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியன் 2" படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் இறந்தனர். அதற்கடுத்து "சர்தார் 2"லும் விபத்து நடந்த மரணம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஏழுமலையின் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுததை பார்த்து கார்த்தியும் கண்கலங்கினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!