
தன் குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா
விஜய் ஜோடியாக "நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா" ஆகிய படங்களில் நடித்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள்.
அதன்பின் சில டிவி ஷோக்களில் நடுவர் ஆகப் பணியாற்றினார் ரம்பா. அடிக்கடி சென்னை வந்து செல்வார். தற்போது சென்னை வந்துள்ளவர் தனது கணவர், குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்துள்ளார்.
“பல வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!