
பிளாஷ்பேக் : ஒரே ஒரு வெற்றிக்காக போராடிய பி.யு.சின்னப்பா மகன்
திரையுலகின் உச்சியில் இருந்த பி.யு.சின்னப்பா மறைவிற்கு பிறகு அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடிக்க வந்தார் பி.யு.சி ராஜா பகதூர். சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த “வாழ வைத்த தெய்வம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு "கோயில் புறா" படத்தில் குணச்சித்திர வேடத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்தார். இதைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, சிவாஜி நடித்த "தியாகி" போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குபிறகு "கரகாட்டக்காரன்" படத்தில் மட்டன் கடை நடத்துகிறவராக, அதாவது வில்லனாக நடித்தார். அதன்பிறகு சிறிய கேரக்டர்களில் நடித்தார். சிலகாலம் டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.
பின்னர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் நோயுற்று காலமானார். கடைசிவரை அவர் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு படத்திலாது ஹீரோவாக நடித்து அது வெற்றி பெற வேண்டும் என்பதே. அது கடைசிவரை நிறைவேறால் போனது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!