
சந்தீப் கிஷன் ரெஸ்டாரண்டில் சுகாதார அதிகாரிகள் ரெய்டு : காலாவதி அரிசியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டை சோதனை செய்த சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார குறைபாடுகள் உள்ளிட்ட பல குறைகள் இருப்பதை கண்டறிந்து அது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அது மட்டுமல்ல 2022ல் காலாவதியான அரிசி மூட்டை ஒன்றும் அங்கே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புகார்கள் குறித்து மறுத்துள்ள சந்தீப் கிஷன், “அதிகாரிகள் என்னுடைய ஹோட்டலில் எடுத்ததாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் பல எங்களுடைய ஹோட்டலில் எடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல 2022-ல் வாங்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த அரிசி மூட்டை நாங்கள் தர சோதனைக்காக வாங்கி, சரி இல்லை என அப்படியே பயன்படுத்தாமல் வைத்துவிட்ட ஒன்று. கடந்த எட்டு வருடங்களாக நாங்கள் அனைத்து சுகாதார விதிகளையும் சரியாக பின்பற்றியே இந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறோம். உங்களுடைய அன்பை ஒருபோதும் நாங்கள் இழக்க விரும்ப மாட்டோம்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!