
திருமணத்திற்குப் பிறகு நடிக்க வரும் மீதா ரகுநாத்
முன்பெல்லாம் திருமணம் செய்து கொண்டால் கதாநாயகிகளுக்கு மீண்டும் கதாநாயகியாகவே நடிக்க வாய்ப்புகள் கிடைக்காது. அக்கா, அண்ணி ஆகிய வேடங்கள்தான் கிடைக்கும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்று வருகிறார்கள் சிலர்.
திருமணத்திற்குப் பிறகு மீதா நடிப்பாரா இல்லையா என்பது சரியாகத் தெரியாமல் இருந்தது. தற்போது சித்தார்த் நடிக்க உள்ள அவரது 40வது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மீதா. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. "8 தோட்டாக்கள்" படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். சரத்குமார், தேவயானி, சைத்ரா அச்சர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!