
மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்ஜே பாலாஜி கூறி வந்தார். ஆனால் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க மறுப்பதாகவும், அதிக சம்பளம் கேட்பதாகவும், அதனால் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் "மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்" அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த படத்தை ஜசரி கணேசுடன் இணைந்து நயன்தாராவும் தயாரிக்கிறார். இதில் மூக்குத்தி அம்மன், அவரது பக்தை என இரு வேடங்களில் நயன்தாரா நடிப்பதாக தெரிகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!