
அவர் பாடல் எழுதியதால் மகாராஜா படத்தை பார்க்க மாட்டேன் : சின்மயி
சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் சின்மயி. அதற்கு அவர் சொல்லும் காரணமும் வைரமுத்து தான்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் சின்மயி கூறும்போது, “பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசுகின்ற இந்த மகாராஜா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார் என இப்போது தான் தெரிய வந்தது. தங்களுக்கு பிடித்தமான ஒரு நபர் மீது குற்றம் சாட்டியதற்காகவே ஒருவரை வேலை பார்க்க விடாமல் தடை செய்யும் ஒரே துறை தமிழ் சினிமா மட்டும்தான். அதனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை. ஒருநாள், ஒரு கட்டத்தில் பழிவாங்கும் போக்கு அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பாலியல் வன்கொடுமையாளர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு பல மடங்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!