
ஆஷிகாவை பெண்களே காதலிப்பார்கள் : இயக்குனர் கணிப்பு
இவர்களுடன் கருணாகரன், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, ‛‛ஆண்-பெண் நட்பு, அன்பு, காதலை பற்றி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் தீராத அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. காதல் வரும்போது அழகாக மாறும் நம் உலகம், அதன் தோல்வியை பார்க்கும்போது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அப்படி ஒரு லவ் பிரேக்கப்பிற்கு பிறகு பிடிக்காமல் போய்விட்ட பெண்ணோடு ஒரு சாமானிய இளைஞனுக்கு வரும் காதல் தான் இந்தப்படத்தின் கதை.
மீண்டும் ஒரு நிஜமான காதல் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சித்தார்த், இந்தக்கதையை கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்தார். நாயகி சுப்புலட்சுமியாக வாழ்ந்திருக்கிறார் ஆஷிகா ரங்கநாத். படம் வெளியான பிறகு பெண்களே "லவ் யூ" என சொல்லும் விதமாக ரசிகர்களை கவருவார்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!