
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, யார் தெரியுமா?
ஹிந்தியில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் வெற்றி, தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களது சம்பளத்தில் இறங்கு முகம் என்பதே கிடையாது.
தற்போதைய தகவல்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். மற்ற முன்னணி நடிகைகளான ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளி உள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை வாங்குகிறாராம். கங்கனா 15 கோடி முதல் 27 கோடி, பிரியங்கா 15 கோடி முதல் 25 கோடி, காத்ரினா கைப் 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தென்னிந்திய நடிகைகள் யாரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் நாம் விசாரித்த வரையில் நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறாராம். அவரது சம்பளம் 5 கோடி என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!