
இடைவிடாமால் நடக்கப் போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு
அதனால் அஜித் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதனிடையே, "விடாமுயற்சி" பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவியது. சிலர் படம் இத்துடன் டிராப் ஆகிவிட்டது என்றெல்லாம் கூடச் சொன்னார்கள்.
ஆனால், இந்த மாதக் கடைசியில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியானது. சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி படம் குறித்து வந்த வதந்திகளுக்கு வருத்தப்பட்டுள்ளார். அஜர்பைஜானில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
"விடாமுயற்சி" குறித்து சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வந்த நிலையில், படத்தில் நடிப்பவர்களும் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாவதை உறுதி செய்துள்ளனர். தீபாவளிக்கு படத்தை வெளியட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!