
கல்கி 2898 எடி விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம்
ஆந்திராவின் தலைநகராக அமைய உள்ள அமராவதி நகரில் நடக்க உள்ள முதலாவது பிரம்மாண்டமான சினிமா விழாவாக இது இருக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். இந்த விழாவின் மூலம் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்களாம். அதன்பின் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!