
கூலி தாமதம் : லோகேஷ் மீது ரஜினிகாந்த் கோபம் ?
ரஜினிகாந்த் தான் நடித்து வந்த "வேட்டையன்" படத்தின் படப்பிடிப்பை அவசரப்படுத்தி முடிக்க வைத்தார். "கூலி" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அப்படி செய்தார் என்றார்கள். இந்நிலையில் "கூலி" படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்து ரஜினிகாந்த் தனது வருத்தத்தை சற்றே கோபமாக வெளிப்படுத்தியதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கான திரைக்கதையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார் லோகேஷ். ஆனால், இன்னமும் அதை முடிக்கவில்லையாம். முழு திரைக்கதையையும் படித்துப் பார்க்காமல் வரமாட்டேன் என ரஜினி சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல். இன்னும் சில நாட்களில் அதை முடித்துக் கொடுப்பதாக லோகேஷ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அதனால், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!