
பிளாஷ்பேக்: ராசியில்லாத நடிகை எஸ்.பி.எல் தனலட்சுமி
அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். நடனம் மட்டுமல்ல பாடுதிலும் திறமையானவராக இருந்தார் தனலட்சுமி. நடித்த முதல் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து பி.கே.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் "வசந்த சேனா" படத்தில் நடித்தார். அதன் பின்னர் "சௌபாக்கியவதி" படத்தில் நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த "காளமேகம்" படத்திலும், "தேச பக்தி" என்ற படத்திலும் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது ஒரு சில படங்கள் சுமாராக போனது.
7 படங்களில் மட்டுமே நடித்த தனலட்சுமி சினிமாவை விட்டு விலகி இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தினார். தனலட்சுமிதான் தனது அக்கா மகள் டி.ஆர்.ராஜகுமாரியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மாறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!