
கங்கனா கன்னத்தில் ‛பளார் விட்ட பெண் காவலர்
இந்த நிலையில், டில்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், இதனால் பெண் காவலாளி கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா ரணாவத்தை அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!