
ரஜினி படத்தில் இணைந்த கமல் பட நடிகை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படமாக "கூலி" என்கிற படத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அபிராமி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் விருமாண்டி, வானவில், மிடில் க்ளாஸ் மாதவன் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி அன்று துவங்குகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!