
பெங்களூரு போதை பார்ட்டி : நடிகை ஹேமா கைது
அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவர் அதை மறுத்தார். ஆனால், ரத்த பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஜூன் 1ம் தேதியே அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் விசாரணைக்கு வந்தார். அப்போது அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!