
போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம்: பட புரமோஷன் காரணமா?
தற்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிவேதா பெத்துராஜின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் கார் டிக்கியை திறக்கச் சொல்லி கேட்கிறார்கள். "சாலையில் செல்கிறேன். பேப்பர்கள் எல்லாம் சரியா இருக்கு” என்று நிவேதா பெத்துராஜ் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.
"எங்களின் கடமை" எனக்கூறி, கார் டிக்கியை திறக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் சொல்வதைக் கேட்காமல், "அதில் எதுவும் இல்லை, திறக்க முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சார். இது மரியாதைக்குரிய விஷயம்" என்று நிவேதா கூறுகிறார். சாலையில் போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது உண்மையில் நடைபெற்றதா அல்லது ஏதேனும் படத்தின் புரமோஷனா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!