
ஜெயம் ரவி - பாண்டிராஜ் புதிய கூட்டணி ?
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். "சைரன்" பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது "ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்" ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் "தனி ஒருவன் 2" படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!