
கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ
மே 12, 2024
Advertisement
ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் "இங்கு நான்தான் கிங்கு". இப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான 10 வினாடி புரோமோ வீடியோ ஒன்று டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோசமான ஒரு கெட்ட வார்த்தையை சந்தானம் பேசியுள்ளார். அந்த வார்த்தையுடனேயே புரோமோ வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் இப்படி கெட்ட வார்த்தைகளுடன் படங்களின் டிரைலர்கள் வெளிவருவது பேஷனாகிவிட்டது. அதனால், ஏதாவது சர்ச்சைகள் உருவாகும். அதை வைத்து பரபரப்பை ஏற்படுத்தலாம் என யாரோ மோசமான மார்க்கெட்டிங் டெக்னிக்கை சொல்வதே அதற்குக் காரணம்.
"யு" சான்றிதழ் பெற்ற ஒரு படத்தின் புரோமோ வீடியோவில் கெட்டவார்த்தை இடம் பெறுவது எப்படி ?.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!