
டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் : ராய் லட்சுமி
இப்போதும் சமூக வலைத்தளங்கள், வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது பிகினி உடை அணிந்து தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு "சின்ட்ரெல்லா" என்ற படத்தில் நடித்தார். அண்ணாச்சி நடித்த "தி லெஜண்ட்" படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கையில் இல்லை.
ராய் லட்சுமி சில தினங்களுக்கு முன்பு தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய பிறந்தநாள் டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் மற்றும் ஆச்சரியங்களுடன் தொடங்கியது. குறிப்பாக என் அன்புக்குரியவர்கள் இவ்வளவு அன்பைக் கொட்டியதற்கு மிக்க நன்றி, இந்த அதீத அன்புக்கு நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையிலேயே விசேஷமாக உணர்கிறேன். உலகம் முழுவதிலுமிருந்து வந்த அனைத்து வாழ்த்துக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. என்னைச் சுற்றி இதுபோன்ற அற்புதமான குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அன்பான மக்கள் இருப்பதில் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று எழுதியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!