
இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா
மே 03, 2024
Advertisement
1500 படங்களுக்கு மேல் இசையமைத்து இசையில் சாதனை படைத்தவர் இளையராஜா. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைக்கிறார். காப்புரிமை தொடர்பாக கடந்த சில தினங்களாக அவரைப்பற்றி பிரச்னைகள் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இளையராஜாவோ மொரீஷியஸ் தீவில் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் தனியாக அலையை ரசித்துபடி இருக்கும் அவரின் போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் இளையராஜா. இந்த போட்டோ வைரல் ஆனது. இப்போது அவருடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான யுவன் இருக்கும் மற்றொரு போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஓட்டல் ஒன்றில் யுவனுக்கு உணவை ஊட்டி விட்டு மகிழ்கிறார் இளையராஜா. இந்த புகைப்படங்கள் வைரலாகின.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!