
ஸ்டார் படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்?
அவர் தற்போது நடித்து வரும் "ஸ்டார்" படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மே 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஏழு கோடி வரை இப்படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதுவரையில் "டாடா" என்ற ஒரே ஒரு ஹிட்டைக் கொடுத்த கவினுக்கு இப்படியான வியாபாரம் ஆச்சரியம் என்கிறார்கள். இளம் இயக்குனர் இளன், யுவனின் இசை ஆகியவையும் இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!