
மதுரை, கல்லம்பட்டி-யில் வீர தீர சூரன் படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்து அப்டேட்டைக் கொடுத்து வருகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம். மதுரை அடுத்த மேலூரில் உள்ள கல்லம்பட்டி என்ற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படப்பிடிப்பின் முதல் நாளன்றே படப்பிடிப்பைப் பார்க்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. விக்ரம் இப்படி தினமும் படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வந்தால் தினமுமே அங்கு கூட்டம் கூடும்.
கிராமத்துக் கதையாக உருவாகி வரும் "வீர தீர சூரன்" படம் மீது இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!