
பிளாஷ்பேக்: ஜானகியை அறிமுகப்படுத்தியருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை
டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான "மகதலநாட்டு மேரி" படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உருமாறி வந்து தேன் மாரி பெய்யுதே...” இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் எஸ்.ஜானகி நுழைந்தார்.
பார்த்தசாரதி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் அவருக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 12 வருடங்கள் இசை அமைப்பாளராக இருந்த அவர் 20 படங்கள்வரைதான் இசை அமைத்தார். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன் என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிதார் ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே.ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை ஒலிவடிவங்களாக வெளியிட்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!