
மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி
கார்த்தியை வைத்து இவர் இயக்கிய பையா திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக மகாபாரதம் கதையை தழுவி அர்ஜுனன், அபிமன்யு என்கிற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இரண்டு பாகங்களாக ஒரு சரித்திர படத்தை இயக்கும் வேலைகளை ஈடுபட்டுள்ளார் லிங்குசாமி.
தமிழில் இதற்கான கதை எழுதும் வேலைகளில் எழுத்தாளர் ஜெயமோகனும், ஹிந்தியில் இதற்கான வேலைகளை பிரபல பாலிவுட் கதாசிரியர் ஒருவரும் கவனித்து வருகின்றனர். மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!