
சப்தம் கிளைமாக்சுக்காக ரூ.2 கோடியில் ‛ஓல்டு லைப்ரரி: அறிவழகன் தகவல்
படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படம் பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது : "ஈரம்" படம் முழுக்க மழை மற்றும் தண்ணீர் சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. தண்ணீரின் வழியாக பேய் வரும். அதே போன்று "சப்தம்" படத்தில் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சிகள் உருவாகியுள்ளன. முக்கியமாக, சப்தத்தை மையப்படுத்தி நிறைய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சவுண்ட் எபெக்ட்ஸ் மற்றும் விஷூவல் எபெக்ட்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியுள்ளோம். பின்னணி இசைக்காக தமன், ஹங்கேரி சென்றார்.
மும்பை, மூணாறு, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இடைவேளை மற்றும் கிளைமாக்சுக்காக 2 கோடி ரூபாய் செலவில், 120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஆதி பேய் ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். வழக்கமான பேய் படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு புதிய அனுவத்தை தரும் புதுமையான படமாக இருக்கும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!