
சாய்பாபா கோவிலில் விஜய் : படத்தை நீக்கியது ஏன்?
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த புகைப்படங்களை விஜய் நற்பணி இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.
காவி உடை அணிந்த கோவில் நிர்வாகிகளுடன் இருப்பதை பகிர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பது மாதிரியாக விமர்சனம் வந்ததால் அந்த போட்டோவை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!