
இன்று நேற்று நாளை 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த சில மாதங்களாக இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என தகவல் பரவி வந்தது. இப்போது இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை அவரின் கதையை பரத் மோகன் இயக்குகிறார். சிவி குமாரிடம் "மாயவன்" திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், "இக்லூ" மற்றும் "இப்படிக்கு காதல்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த பாகத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள "இன்று நேற்று நாளை 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!