
கேர்ள் ப்ரெண்ட்க்காக 5 மொழிகளில் டப்பிங் பேசிய ராஷ்மிகா
இதை அடுத்து தெலுங்கு இயக்குனரும் பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்க உள்ள "தி கேர்ள் பிரண்ட்" என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை உருவாக்கியுள்ளார் ராகுல் ரவீந்திரன். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசருக்கு அனைத்து மொழிகளிலும் ராஷ்மிகா தான் டப்பிங் பேசியுள்ளார். வரும் ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது
இதில் இன்னும் தான் பணியாற்றாத மலையாள மொழி டீசருக்கும் ராஷ்மிகாவே டப்பிங் கொடுத்துள்ளார். என்றாலும் படம் மலையாளத்தில் வெளியாகும்போது அவர் டப்பிங் பேசப்போவதில்லை என்றும் ராகுல் ரவீந்திரன் கூறியிருக்கிறார்.. வித்தியாசமான காதல் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகன், மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!