
அர்னால்டுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது
அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. என்றாலும் இப்போதும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த "பூபர்" படம் வெளியானது. தற்போது "குங் பியூரி 2" படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு இதயப் பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது.
பேஸ்மேக்கருடன் இருக்கும் படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அர்னால்டு, “நன்றி, நான் உலகம் முழுவதிலுமிருந்து பல வகையான செய்திகளைப் பெற்றுள்ளேன், ஆனால் அதில் முக்கியமாக எனது பூபர் சீசன் 2 -ல் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்று பலர் கேட்டுள்ளனர். நிச்சயமாக இல்லை. ஏப்ரலில் படப்பிடிப்புக்கு செல்ல நான் தயாராக இருப்பேன்” என்று எழுதியுள்ளார்.
ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!