
பிளாஷ்பேக் : 90 வருடங்களுக்கு முன்பே லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்த நடிகை
லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார். சில குறும்படங்களை இயக்கினார். ஆங்கிலம், ஹிந்தியில் "கர்மா" என்ற முதல் பேசும்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவில் முதல் லிப் லாக் முத்தக்காட்சி இது.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த தேவிகா ராணி சொந்தமாக ஸ்டூடியோ கட்டினார், தியேட்டர் கட்டினார், சினிமாவின் அத்தனை பணியிலும் ஈடுபட்ட தேவிகா ராணி இந்திய சினிமாவின் முதல் பெண் ஆளுமை என்று போற்றப்படுகிறார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை முதலில் பெற்றவரும் இவர்தான். இன்று தேவிகா ராணியின் 116வது பிறந்த நாள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!