சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி
மார் 28, 2024
Advertisement
கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். அதையடுத்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தர்மம் வெல்லும் என்ற பெயரில் உருவாக இருந்தது. சூர்யாவிடத்தில் கதை சொல்லி இருந்தார் நலன் குமாரசாமி. பின்னர் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. அதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி.
இந்த நிலையில்தான் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் எஸ்.ஜே என்பவர் இயக்கிய நிலையில் தற்போது, சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் நலன் குமாரசாமி. இரண்டாம் பாகத்திற்காக சூர்யா நடிப்பில் தர்மம் வெல்லும் என்ற பெயரில் எழுதி வைத்திருந்த அதே கதையை தற்போது மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கப்போகிறாராம் நலன் குமாரசாமி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!