சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்
மார் 28, 2024
Advertisement
சிவா இயக்கத்தில் ‛கங்குவா" படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் இந்தப்படம் தயாராகி உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இது சூர்யாவின் 43வது படமாக உருவாக உள்ளது. இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சூர்யா-கார்த்தி சுப்பராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் இணைந்து படம் பண்ணுவது இதுவே முதல்முறையாகும். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மரங்கள் பின்னணியில் கார் ஒன்று பற்றி எரிவது போன்று உள்ளது. மேலும் அதன் உடன் Love Laughter War என குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!