
‛பேமிலி ஸ்டார் வெற்றிக்காக எல்லம்மா கோவிலில் வழிபட்ட மிருணாள் தாக்கூர்
கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த இயக்குனர் பரசுராம் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக ஐதராபாத்தில் பல்காம்பேட் எல்லம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் மிருணாள் தாக்கூர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!